ராணுவத்தில் சேர பயிற்சி அளிப்பதாக கூறி வசூல் வேட்டை: விளையாட்டு ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
குமரியில் ராணுவத்தில் சேர பயிற்சி அளிப்பதாக கூறி தனிநபர் வசூல் வேட்டை நடத்தி வருவதாக விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்க நலசங்க தலைவர் கண்ணன் வெளியிட்டு உள்ள அறிக்கையில்.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தனி நபரால் இளைஞர்களிடம் இராணுவம் மற்றும் காவல் துறை பணியில் சேர கட்டணமாக முதல் மூன்று மாதத்திற்கு 4500 /- ரூபாய் வீதமும் அதன் பிறகு வேலை கிடைக்கும் வரை மாதம் 1500/- கட்டணம் வசூலித்து வருவதாக தெரியவருகிறது.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அரசு விதிகளை மீறி தனியார் பயிற்சியளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர், அதே நபர், தங்கும் விடுதி தடகள மாணவிகளுக்கும் பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே தங்கும் விடுதி மாணவிகளுக்கு ஆண் பயிற்றுனர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் உள்ள தங்கு விடுதி மாணவிகளுக்கும் மற்றும் இரணுவத்தில் சேருவதற்கு இளைஞர்களுக்கும் ஒரே நபர் கட்டணம் வசூலித்து பயிற்சி வழங்கி வருவதாக தெரிகிறது.
இவ்வாறு பயிற்சி வழங்க மாவட்ட விளையாட்டு அலுவலர் எவ்வாறு அனுமதி வழங்கினார் என்பதும், இதனால் மாவட்ட விளையாட்டு அலுவலர் என்ன மாதியாக பயனடைந்தார் என்பதும் மர்மமாக உள்ளது.
இது போன்ற தவறான செயல்பாடுகளை ஊக்குவிப்பதை தவிர்கவில்லை என்றால், இதுபோன்ற அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளை கண்டித்து வெகுவிரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.