குமரியில் பிரபல துணி கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை

வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து குமரியில் பிரபல துணி கடைகளில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.;

Update: 2021-10-26 14:00 GMT

மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் துணி கடைகள் மற்றும் நகை கடைகளில் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.

குறிப்பாக துணி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த துணிக்கடைக்கு சொந்தமான இரண்டு கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதனையொட்டி அந்த இரு கடைகளின் ஷட்டர்களும் பாதி அளவுக்கு மூடப்பட்டது மேலும் கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதேபோல் கடைக்குள் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட யாரும் செல்லவும் அமைக்கப்படவில்லை. காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News