ஆவின் நிறுவன பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல்
- அதிமுக மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆவின் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளாக ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் ராஜன். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வேறு ஒரு பணியாளருக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டில் எதிர் தரப்பு பணியாளருக்கு ஆதரவாக ஆவின் நிறுவனத்தின் தலைவரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அசோகன் இருந்து வருவதாக பாதிக்கபட்ட நபர் ராஜன் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜனை மர்ம நபர்கள் தாக்கியதில் கை கால் என பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த ராஜன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தல் விதி முறைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து வரும் அசோகன் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் அவர் வகித்து வரும் தலைவர் அறையில் வந்து அமர்ந்து ஆவின் நிறுவன ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து வருவது தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறிய ராஜன்,
தன்னை ஆவின் நிறுவனத்தில் வைத்து அசோகன், தன்னை வண்டியில் தூக்கி போடுங்கடா என்று மிரட்டியாகவும், பின் ஆவின் நிறுவனத்தில் இருந்து வெளியே வரும் போது அவருடைய ஆட்கள் தன்னை தாக்கியதாகவும், அப்போதும் கூட அவர் காரில் இருப்பதை நான் பார்த்ததாகவும் ராஜன் கூறினார்.