குமரியில் தலைக்கவசம் வாகன சோதனை - காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு

கன்னியாகுமரியில் தலைக்கவசம் குறித்த வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக நடத்தினார்.

Update: 2022-04-22 09:06 GMT

கன்னியாகுமரியில் எஸ்.பி. ஹரி கிரண் பிரசாத்  ஹெல்மட் அணிவதன் அவசியம் பற்றி மக்களிடம் நேரடியாக பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகத்துடன் வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளால் சரியான முறையில் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடந்து செல்லும் பொது மக்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கவும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் சாதாரண உடையில் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்த அவர் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறினார்.

Tags:    

Similar News