மாநகராட்சி சார்பில் கை கழுவும் பயிற்சி - பொதுமக்கள் பாராட்டு
குமரியில் நோய் தடுப்பு முறையில் ஒன்றான கைகளுவும் முறை குறித்த பயிற்சி அளித்த மாநகராட்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி குமரி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வடசேரி பேருந்து நிலையத்தில் அங்கு வரும் பயணிகளுக்கு கை கழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது.