கொல்லங்கோடு கோவில் மீனபரணி திருவிழா - கோலாகலமாக நடைபெற்றது
கொல்லங்கோடு கோவில் மீனபரணி திருவிழாவில் அம்மன் எழுந்தருளால் விழா விமரிசையாக நடைபெற்றது.;
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அம்மன் எழுந்தருளுதல் நிகழ்வு நடந்தது, இதில் மேள தாளங்கள் முழங்க கோவிலினுள் இருந்து தேவி விக்ரகங்கள் வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பூஜாரிகள் தலைமேல் விக்ரகங்களை சுமந்தபடி மேளதாளத்திற்கு ஏற்ப காலடி வைத்து கோவிலை சுற்றி வலம் வைக்க பின்னால் தூக்கக்காரர்கள் முத்துக்குடை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக நடந்து சென்றனர். அப்போது கூடி நின்ற பக்தர்கள் குலவையிட்டு பரவசமடைந்தனர், இந்த நிகழ்வை காண தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்திருந்தனர்.