குமரியில் விநாயகர் சிலைகள் உடைப்பு: பதற்றத்தால் போலீசார் குவிப்பு

குமரியில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2021-09-08 13:15 GMT

மர்ம நபரால் உடைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.

விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 2 இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும் ஊர்வலம் நடத்தவும் கொரோனா காரணத்தால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள சாலை ஓரங்களில் ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கூல் பேப்பர் ஆகியவற்றால் தயார் செய்யப்பட்டதும், வீடுகளில் வைத்து வழிப்படுவதற்காக சிறிய அளவிலான விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே சம்பவ இடத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் ஏராளமான குவிந்தனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News