முழு ஊரடங்கு: நாகர்கோவில் மாநகராட்சி எச்சரிக்கை..!
முழு ஊரடங்கில் சாலை ஓரங்களில் டீ வியாபாரம் செய்தால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் - நாகர்கோவில் மாநகராட்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் சாலை ஓரம் டீ வியாபாரம் செய்வதாக மாநகராட்சிக்கு வந்த புகாரைத் தொடர்ந்து ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் படி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள் மாதவன் பிள்ளை ஆகியோர் அடங்கிய குழு மேற்கொண்ட சோதனையில் தடையை மீறி டீ வியாபாரம் செய்துகொண்டிருந்த 3 நபர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் டீ கேனும் பறிமுதல் செய்யப்பட்டது, இந்நிலையில் முழு ஊரடங்கின் போது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் சாலையோரத்தில் டீ வியாபாரம் செய்தால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.