சரக்கு இரயில் தடம் புரண்டது, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு இல்லை
குமரிக்கு ரேஷன் அரிசி ஏற்றி வந்த இரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு 2,500 டன் ரேஷன் அரிசி ஏற்றி கொண்டு 42 பெட்டிகளுடன் சரக்கு வந்தது.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நுழைவதற்காக இரயில் வரும் போது எதிர்பாராத விதமாக தடம் புரண்டது. இதில் ஒரு இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது.
இதனிடையே இரயில் தடம் புரண்ட தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த இரயில்வே ஊழியர்கள் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நிலைமை சரி செய்யப்பட்டது.