வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி பரிசோதனை

Update: 2021-04-18 17:45 GMT

நாகர்கோவிலில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.மேலும் நாகர்கோவில் மாநகரில் கொராேனா தொற்று ஏற்படுவதற்கு முன்பே கண்டறிந்து அவர்களை குணப்படுத்த நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வீடு வீடாக காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை செய்யும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பரிசோதனையை ஒரு வார காலத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News