'பயப்படாம ஓட்டு போட வாங்க' மத்திய ரிசர்வ் போலீஸ் கொடி அணிவகுப்பு

தேர்தலில் பொதுமக்கள் அச்சமில்லாமல் ஓட்டு போடுவதற்காக கன்னியாகுமரியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Update: 2021-03-04 03:00 GMT

தேர்தலில் பொதுமக்கள் அச்சமில்லாமல் ஓட்டு போடுவதற்காக கன்னியாகுமரியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வந்துள்ளனர்.

மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள பாதுகாப்பு படையினர் இன்று போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும், ஓட்டு போடுவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தொடங்கி, நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்த இந்த பேரணி மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முடிவடைந்தது.

நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News