கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டுமென கிராமிய கலைஞர்கள் கன்னியாகுமரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கொரோனா தடை உத்தரவு காரணமாக பெரிய மற்றும் சிறிய கோவில்களில் திருவிழா நடத்த அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்ட கிராமிய கலைஞர்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், கோவில் திருவிழாக்களை முழுவதுமாக தடை செய்வது மூலம் தங்கள் குடும்பங்கள் வறுமையில் வாடும் என்பதால் பெரிய கோவில்களை தவிர்த்து சிறிய கோவில்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு அரசு அனுமதி வழங்கி கிராமியக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
மற்ற தொழில்கள் தடையின்றி இயங்குவது போல கிராமியக் கலைஞர்களின் தொழிலும் இயங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.மேலும் தமிழக அரசு அறிவித்த நிதி உதவி வேண்டாம் எனவும், நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தால் போதும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.