ஆக்கிரமிப்பு கட்டிடம் அகற்றம் - நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்றி, நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2021-10-08 14:15 GMT

வடிவீஸ்வரம் ரத வீதியில்,  சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் அகற்றப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ரதவீதியில்,  பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து தனிநபரால் கட்டப்பட்ட கட்டிடம் இருந்து வந்தது. இதுதொடர்பாக வந்த புகாரினை அடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, கட்டிடங்களை அகற்ற உத்தரவிடப்பட்டு இருந்தது.

எனினும், அந்த கட்டிடத்தை, அவர்கள் அகற்றாத காரணத்தினால், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் தலைமையில்,  அதிகாரிகள் இன்று சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்றினர். 

Tags:    

Similar News