மனு கொடுக்க வந்த வயதான தம்பதி - இறங்கி வந்து மனுவை பெற்ற போலீஸ் எஸ்பி
குமரியில் மனு கொடுக்க வந்த வயதான தம்பதியை பார்த்து அறையில் இருந்து இறங்கி வந்து மனுவை பெற்றார் போலீஸ் எஸ்பி பத்ரி நாராயணன்.;
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை தினசரி நேரடியாகவும், வாட்ஸ் அப் மூலமாகவும் பெற்று அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர், அப்போது
மள்ளங்கோடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன்(72) என்ற முதியவர் நடக்க முடியாமல் உள்ள மனைவியை வீல்சேரில் அழைத்துக்கொண்டு மனு ஒன்றினை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார்.
இதனை சிசிடிவி கேமரா மூலம் பார்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வயதான தம்பதியினர் இருக்கும் இடத்திற்கே சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனிதாபிமானம் மிக்க இந்த செயல் அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டை பெரும் வகையில் அமைந்தது.