கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

73 ஆவது குடியரசு தின விழா கன்னியாகுமரியில் கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2022-01-26 14:15 GMT

குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார்.

நாட்டின் 73- வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.

அதன்படி நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மூவர்ண பலூன்களை வானில் பறக்க விட்ட மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், மருத்துவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட 273 பேருக்கு பாராட்டு சான்றிதல்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதோடு விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Tags:    

Similar News