நாகர்கோவில் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு, மாநகராட்சிக்கு பாராட்டு

நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவின் மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-07-31 11:00 GMT

நாகர்கோவில் மாநகராட்சி வேப்பமூடு பூங்காவை மேம்படுத்துவது குறித்து குமரி ஆட்சியர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில் மாநகராட்சி வேப்பமூடு பூங்காவை மேம்படுத்துவது குறித்து குமரி ஆட்சியர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக விளங்குவது மாநகரத்தில் மத்தியில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா.

இந்த பூங்காவில் தினந்தோறும் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாநகராட்சி பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் பூங்காவினை மேம்படுத்துவது குறித்தும் ஏற்படுத்தப்பட வேண்டிய வசதிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜிதிடம் கேட்டறிந்தார்.

மேலும் பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு மக்களை கவரும் திண்ணைகள் அமைத்த நகராட்சி பணியாளர்களை பாராட்டினார்.

ஆய்வின் போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.கிங்சால் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News