கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ராஜக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அதிமுக செயலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். பிரச்சாரத்தின்போது எம்.ஆர். காந்தி பேசுகையில்,
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை தீர்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பின்தங்கிய பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பெற்று வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.