டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: தீவிரம் காட்டும் நாகர்கோவில் மாநகராட்சி
கனமழையை தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில், நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.;
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றைய தினம் மாநகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நாகர்கோவில் பீச் ரோடு மற்றும் கார்மல் பள்ளிக்கூடங்கள் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
அங்கிருந்த கடைகளில் இருந்த பழைய டயர்களில் நீர் தேங்கி இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதை அடுத்து, அப்பகுதிகளில் இருந்த பழைய டயர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தினர். மேலும், கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக மாநகராட்சி டி.பி.சி பணியாளர்கள் மூலமாக, தினசரி ஆய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.