நாகர்கோவில் மாநகராட்சி - ஆதரவற்றோருக்கு உணவு வழங்க கட்டுப்பாடுகள்.
மாநகராட்சி அனுமதியின்றி யாரும் உணவுகளை விநியோகம் செய்யக்கூடாது. உணவு விநியோகம் செய்ய வரும் தன்னார்வலர்களுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் நாகர்கோவில் மாநகரில் சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தற்பொழுது உணவுகளை வழங்கி வருகிறார்கள்.
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஆகையால், நாகர்கோவில் மாநகரில் உணவு வினியோகம் செய்யும் தன்னார்வ அமைப்புகள் மாநகராட்சி அலுவலகம் மூலமாக மட்டுமே தினசரி உணவுகளை விநியோகம் செய்ய வேண்டும்.
மாநகராட்சி அனுமதியின்றி யாரும் உணவுகளை விநியோகம் செய்யக்கூடாது. உணவு விநியோகம் செய்ய வரும் தன்னார்வலர்களுக்கு தினசரி காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மாநகராட்சியானது சாலை ஓரத்தில் இருப்பவர்களை ஓர் இடத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.