கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடுவதை கண்காணித்து வந்த நிலையில், களியக்காவிளை அருகே கழுவன்திட்டை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிரியகொல்லா கிராமத்தை சேர்ந்த ராஜன் வயது 64 மற்றும் குமார் வயது 74 ஆகியோரை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட கட்டு கட்டாக 500 ரூபாயுடன் சுற்றி வந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து சுமார் 180 கள்ள நோட்டுக்கள் கட்டுகள் பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை பிடித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த கும்பல் யார் தலைமையில் இயங்கி வருகிறது என்றும் இவர்கள் எங்கெல்லாம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.