24 மணி நேரமும் மக்கள் பணியில் நாகர்கோவில் மாநகராட்சி - பொதுமக்கள் பாராட்டு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றி வருகிறது நாகர்கோவில் மாநகராட்சி -பொதுமக்கள் மகிழ்ச்சி
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது நாகர்கோவில் மாநகராட்சி.
அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாகவும் மாவட்டத்தின் முக்கிய வர்த்தக பகுதியாக இருக்கும் கோட்டார் கம்பளம் பகுதியில் கடைகளுக்கு நேரம் ஒதுக்கி மொத்த கொள்முதல் செய்யும் கடைக்காரர்களுக்கு டோக்கன் வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்தது மாநகராட்சி நிர்வாகம். மேலும் டோக்கன் பெறாமல் சில்லறைக்கு பொருட்கள் வாங்க வரும் நபர்களை கண்காணித்து அவர்களை திருப்பி அனுப்புவதோடு சில்லறைக்கு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து ஒழுங்கு படுத்தியது.
மேலும் விதிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களை கண்காணித்து எச்சரிக்கை செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து அந்த நிறுவனம் விதி மீறலில் ஈடுபட்டால் அபராதம் விதித்து வருகின்றனர் இதனால் மாநகராட்சியின் உத்தரவை மதிக்காத வணிக நிறுவனங்கள் கூட அவருக்கு பயந்து விதிமுறைகளை சரியாக பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
இதே போன்று மாநகராட்சி சார்பில் போடப்படும் தடுப்பூசி முகாம்களில் சமூக இடைவெளி கடைபிடித்தால் மாநகர் முழுவதும் நடமாடும் பரிசோதனை வாகனம் அமைத்து காய்ச்சல் சளி பரிசோதனை செய்தல் உள்ளிட்ட பன்முக தன்மையை வெளிக்காட்டியது மாநகராட்சி நிர்வாகம்.
கொரோனா முதல் அலையின் போது நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் இப்போது தொற்றின் தாக்கம் பலமடங்கு குறைந்து உள்ளது.
பகல் இரவு என 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் இருந்து நன்மதிப்பையும் பாராட்டுதலையும் பெற்று உள்ளது.