நாகர்கோவில் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-04-25 08:15 GMT

சாலை பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாதாள சாக்கடை திட்டபணிகள் முடிவுற்ற பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட பெருமாள் நகர் 1 மற்றும் பெருமாள் நகர் 2 ஆகிய சாலைகள் சீரமைக்கப்பட உள்ளன.

இதனிடையே இந்த பணியினை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் சாலை சீரமைப்பினை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News