வடிகால்கள் தூர்வாரும் பணி: நாகர்கோவில் மாநகராட்சி சுறுசுறுப்பு

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, வடிகால்கள் தூர்வாரும் பணியில் நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

Update: 2021-10-05 15:00 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி துரித முறையில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று வடசேரி மற்றும் கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த பணியினை, மாநகர் நல அலுவலர் விஜய்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணியின் தன்மை குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags:    

Similar News