கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு வீடாக தனிநபர் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 18403 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாகர்கோவில் வடசேரி பகுதியில் 4 குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிலைய ஊழியர்கள், மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள், நாகர்கோவிலை சேர்ந்த மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. ஊழியர்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷாவின் நேரடி மேற்பார்வையில் 52 வார்டுகளிலும் 308 கொசு ஒழிப்பு பணியாளர்கள் துணையுடன் சுகாதார அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக தனிநபர் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதோடு கபசுர குடிநீர் வினியோகத்தை துவக்கி உள்ளனர்.