குமரியில் கொரோனா விதிமீறல்: கடைகளில் சோதனை - அபராதத்துடன் எச்சரிக்கை
குமரியில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளில் சோதனையுடன் அபராதம் விதித்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.;
கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலுடன் நிபா வைரசும் மக்களை மிரட்டி வருகிறது, இதனிடையே கேரளாவில் கட்டுக்கடங்காமல் இருந்து வரும் நோய் தொற்று குமரியில் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், உள்ளிட்ட அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன, ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில கடைகள் வணிக நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை கடைபிடிப்பது இல்லை என்ற தொடர் புகார் எழுந்தது.
இந்நிலையில் நாகர்கோவிலில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர், அப்போது கடையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் கடையில் உள்ளவர்களுக்கு முக கவசம் மற்றும் சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தையும் எடுத்து கூறினார்கள், தொடர்ந்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.