டெலிவரி பாய்ஸ்க்கு கொரோணா பரிசோதனை - மாநகராட்சி நடவடிக்கை
உணவு வழங்கும் பணியாளர்கள்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோணா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.இந்நிலையில் கொரோணா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ள நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் முன்னிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் செயல்படும் சோமட்டோ மற்றும் ஸ்விகி ஆகிய நிறுவனங்களில் வீடுகளுக்கு சென்று உணவு வழங்கும் பணியாளர்கள் 80 பேருக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணன்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.