காவல் ஆய்வாளருக்கு கொரோனா: காவல் நிலையம் மூடப்பட்டது

Update: 2021-04-13 03:20 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் சோதனைகளை அதிகப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளி நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்கு நுழையும் வாகனங்கள் அனைத்தும் எல்லை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இ பாஸ் மூலம் வரும் வாகனங்களில் உள்ள நபர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகே அவர்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நாகர்கோவில் கோட்டார் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, இதைத் தொடர்ந்து அந்த காவல் நிலையம் அடைக்கப்பட்டு அங்கு மாநகராட்சி பணியாளர்கள் மூலம் காவல் நிலையம் சுத்தப்படுத்தப்பட்டது.

மேலும் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே ஆய்வாளருடன் பணியில் இருந்த அனைத்து காவலர்கள் மற்றும் அவருடன் தொடர்ந்து இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News