கன்னியாகுமரி மாவட்ட த்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
குமரியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதனிடையே, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட விழிப்புணர்வு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 1000 க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போதுநாள் ஒன்றுக்கு சராசரி பாதிப்பு 30 ஆக உள்ளது.இன்று குமரி மாவட்டத்தில் 21 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நிலையில் தற்போது குமரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது.