குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா: கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

குமரியில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கல்லூரியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.;

Update: 2021-12-13 14:15 GMT

பள்ளியில் கிறுமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாகர்கோவில் இந்து கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மாணவியுடன் படித்த மற்றும் தொடர்பில் விரிந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோய் தொற்று முழுமையாக அகலாத நிலையில் பொதுமக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் சென்று தடுப்பூசியை செலுத்தி கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News