நிதி நிறுவன மேலாளருக்கு கொரோனா

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாநகராட்சி பணியாளர்கள்.

Update: 2021-04-18 18:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பிஸ்லரி ரோடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதிநிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இன்ஸ்டா நியூஸ், தமிழ்நாடு, நாகர்கோவில், தனியார் நிதி நிறுவனம், வடசேரி, கன்னியாகுமரி, கொரோனா தொற்று, சுகாதார ஆய்வாளர்,

இதனைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பணிபுரிந்த நிதி நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும் அந்த அலுவலத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மூன்று பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News