குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

குமரியில் வன அதிகாரி உட்பட 9 வனத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-27 13:00 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்து இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குமரியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது உள்ள நிலையில் 5803 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே குமரியில் நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் போலீசார், தீயணைப்புத் துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என பல்வேறு தரப்பு அரசு ஊழியர்களும் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட நாகர்கோவிலில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் 9 வன ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வனத்துறை அலுவலகம் முழுவதையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.

மேலும் வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News