கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கலெக்டர் திடீர் விசிட்!

கன்னியாகுமரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-04-29 06:02 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட, வள்ளன் குமரன்விளை, வடசேரி, கனகமூலம், புதுத்தெரு போன்ற பகுதிகளில், கொரொனா தொற்றின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை  தொடர்ந்து அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அந்த பகுதிகளுக்கு நேரடியாக சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  தடுப்பூசி போடும் பணி மற்றும் சளி பரிசோதனை உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News