பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம், குமரி ஆட்சியர் தகவல்
பொது விநியோகத் திட்டத்திற்கு தனியார் ஆலைகள் விண்ணப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டு உள்ள அறிவிக்கயில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
நெல் கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் முகவராக உள்ள தனியார் ஆலைகள் மூலம், அரவை செய்து பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்குவதற்கு ஏதுவாக கிளீனர், மெக்கானிக்கல், டிரையர், நவீன கொதிகலன் பிரிவு, குடோன் உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியார் ஆலை உரிமையாளர்களிடமிருந்து அரவை முகவராக நியமனம் செய்வது தொடர்பான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சிறு தொழில் மையம், கோணம், நாகர்கோவில்- 4 என்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.