சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - கவுன்சிலர் ரூ.1 லட்சம் நன்கொடை

சந்தனமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் பணி ரூபாய் 1 லட்சம் நன்கொடை வழங்கி, கவுன்சிலர் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-03-12 02:15 GMT

சந்தன மாரியம்மன் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய கவுன்சிலர் கண்ணன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் 25 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அக்க்ஷயா கண்ணன் போட்டியிட்டு,  தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக, பாஜக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனிடையே,  தனக்கு பெரும் ஆதரவு தந்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அக்க்ஷயா கண்ணன், வார்டு மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க,  அங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவிலுக்கு 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி கோவில் கும்பாபிஷேக பணியை தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News