குமரி பாத்திரகடையில் மூட்டை 'அபேஸ்': கஞ்சா வாலிபர்கள் போலீசில் ஒப்படைப்பு

குமரியில் பாத்திரகடையில் பாத்திர மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடிய கஞ்சா வாலிபர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Update: 2021-10-01 14:45 GMT

குமரியில் பாத்திர மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடிய கஞ்சா வாலிபர்களை பாெதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் மைய பகுதியாகவும் 24 மணி நேர போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் அடுக்கடுக்காக வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகவும் காணப்படுகிறது செட்டிக்குளம் பகுதி.

இந்த பகுதியில் செயல்படும் பாத்திர மொத்த விற்பனை கடை ஒன்றில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் பாத்திரங்களை வாங்கி அதனை ஒரு சாக்கில் கட்டி வைத்து இருந்தனர், அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பாத்திர மூட்டையை எடுத்து கொண்டு சென்றனர்.

இதனை கண்ட பாத்திரக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சப்தம் போட்ட நிலையில் அங்கு ஆட்டோ ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களில் ஒருவர் கஞ்சா போதையிலும் மற்றொருவர் மது போதையிலும் இருந்தது குறிப்பிட தக்கது.

Tags:    

Similar News