பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை; மாநகராட்சி ஆணையர் திறப்பு

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.;

Update: 2021-08-25 13:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட சிரமம் அடைந்து வந்தனர்.

இதனிடையே பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் அண்ணா பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் வசதிக்காக தனி அறையை உருவாக்கியது நாகர்கோவில் மாநகராட்சி.

காற்றோட்டமான சுகாதாரம் கொண்ட இந்த அறையை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகள் குறித்தும், மாநகராட்சி கடைகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News