எல்.ஐ.சி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை

எல்.ஐ.சி ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

Update: 2022-01-24 18:00 GMT

திருட்டு நடந்த வீடு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூரியராஜ்( 64). எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜிக்கு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக கடந்த 17-ந் தேதி மனைவி மற்றும் மகளுடன் நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து குடும்பத்துடன் வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சூரியராஜ் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த செயின், காப்பு என 11 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சூரியராஜ் வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News