குமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ உட்பட பாஜக வினர் 600 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட 600 பிஜேபியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-05-08 02:45 GMT

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய வன்முறையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் பலியாயினர்.மேலும் அவர்களது வீடுகள் தீக்கிரை செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதோடு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைக்க கோரி தமிழகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில், கொட்டாரம், சுசீந்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நாகர்கோவிலில், வடசேரி வெட்டூர்ணிமடம் , பீச் ரோடு சந்திப்பு , மீனாட்சிபுரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததகொரோனா பரவல் காரணமாக காரணமாக ஆர்ப்பாட்டங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எம்எல்ஏ.,எம்.ஆர்.காந்தி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News