குமரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
குமரியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.;
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் செயல்படும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி மேயருக்கு தகவல் வந்தது.
இந்த தகவலை தொடர்ந்து மேயர் மகேஷ், திடீரென அந்த கடைக்கு சென்று பார்வையிட்டார். அப்பொழுது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை பார்த்து உடனடியாக அந்த கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி அந்த கடைக்கு 20-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அங்கு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனிடையே தொடர் நடவடிக்கை மேற்கொண்டு ஆய்வு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேயர் உத்தரவிட்டு உள்ளார்.