கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கமும், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும் இணைந்து 'கொரோனா வருமுன் காப்போம்' திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு ஆயுர்வேத கல்லூரியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்கியதோடு அவர்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருந்துகளையும் வழங்கினர்.