நாகர்கோவிலில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்து; ஓட்டுனர் மீது வழக்கு

நாகர்கோவில் ஆட்டோ ஓட்டுனரின் கவன குறைவால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

Update: 2021-08-31 14:45 GMT

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அதிவேகமாக வந்த ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலையாக அமைந்துள்ளது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, இரண்டு பேருந்து நிலையங்கள் இருக்கும் பகுதி என்பதால் அனைத்து பேருந்துகளும் இந்த சாலை வழியாக மட்டுமே செல்ல முடியும்.

மேலும் அரசு அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் என 24 மணி நேரமும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாக காணப்படும் இந்த சாலையில் இன்று பிற்பகலில் அதிவேகமாக ஆட்டோவை இயக்கிய அதன் ஓட்டுநர் சந்திப்பில் உள்ள சிக்னலை பார்த்து திடீரென பிரேக் போட்டதால் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுனருக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிவேகமாக வந்த ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News