நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் மாயம் - போலீசார் விசாரணை
நாகர்கோவிலில், தொழிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி புளியவிளை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன், (வயது 53). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற நாகராஜன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
வெளியூர் சவாரி சென்று இருப்பார் என எண்ணிய அவரது மனைவி ரமணி நீண்ட நேரம் ஆகியும் நாகராஜன் வீடு திரும்பாததால் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் மாயமான ஆட்டோ டிரைவர் நாகராஜனை தேடி வருகிறார்.