பாலியல் பலாத்காரம் செய்த காவல் அதிகாரியை காப்பாற்ற முயற்சி: இளம்பெண் போராட்டம்

பாலியல் பலாத்காரம் செய்த காவல் அதிகாரியை காப்பாற்ற முயற்சிப்பதாக கூறி எஸ்.பி அலுவலகத்தில் இளம்பெண் போராட்டம்.

Update: 2021-12-16 15:30 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட ஜோஸ்பின்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஜோஸ்பின். இவர் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அப்போதைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கத்திடம் நட்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோஸ்பின் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் மீது போலீசாரால் நடவடிக்கை எடுக்காத நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல் பெற்று அதன்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கில் குறிப்பிடப்பட்ட குற்றப்பிரிவுகளை மாற்றி பிணையில் வெளி வரும் வகையிலான குற்ற பிரிவுகள் பதிவு செய்து சுந்தரலிங்கத்தை போலீசார் பாதுகாப்பதாகவும் கூறினார்.

அதனால் அவர் பிணையில் வெளிவந்ததாக கூறியும், சுந்தரலிங்கத்துக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய கேட்டும் ஜோஸ்பின் இன்று திடீரென நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திடீரென சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் காவல் பெண் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற நிலையில், அதற்கு ஒத்துழைக்க மறுத்த ஜோஸ்பின் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News