நாகர்கோவிலில் பெண் பழ வியாபாரி மீது தாக்குதல்: வாலிபர் கைது

குமரியில் பெண் பழ வியாபாரியை தாக்கி பழங்களை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-23 15:00 GMT

நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பெண் பழ வியாபாரியை தாக்கி சேதப்படுத்தியதால் சாலையில் சிதறி கிடக்கும் பழங்கள்.

நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம், இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயம் முன் நடைபாதையில் கடந்த 4 ஆண்டுகளாக பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அந்த பகுதியில் ஸ்டியோ நடத்திவரும் குணசேகரன் என்பவர் இங்கு பழவியாபாரம் செய்யக்கூடாது என்றும் பழ வியாபாரத்தால் தனது ஸ்டுடியோ தொழில் பாதிக்கிறது என கூறி கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அப்பெண்மணி உங்கள் கடை முன்பு வியாபாரம் நடத்தவில்லை தேவாலயம் ஓரத்தில் தான் நடத்துகிறேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று அதே பகுதியில் பழ வியாபாரத்திற்காக கொய்யா, பப்பாளி போன்ற பழங்களை ஒரு பெட்டியில் வைத்து விற்பனை செய்யும் போது, ஸ்டியோ உரிமையாளர் குணசேகரன் மற்றும் அவரது மகன் அருண் ஆகியோர் பஞ்சவர்ணத்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் சிறு தொழில் என்றும் பார்க்காமல் பெட்டியுடன் பழங்களை ரோட்டில் தூக்கி விசியுள்ளனர். மேலும் அந்த பெண் வியாபாரியையும் தாக்கியுள்ளனர். இதனை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து வீடியோ பதிவு செய்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து ஸ்டுடியோ உரிமையரிடம் பழ வியாபாரம் செய்யும் பெண்மணிக்கு ஆதரவாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவ இடம் வந்த போலீசார் பழங்களை தூக்கி வீசியெறிந்த குணசேகரனின் மகன் அருண் ஐ விசாரணைக்காக கோட்டார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

பழங்களை சாலை ஓரத்தில் வைத்து விற்பனை செய்த பெண்ணை தாக்கி, பழங்களை ரோட்டில் தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News