தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆவேசம் - கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு

குமரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2021-07-15 11:30 GMT

கதவை உடைத்து பொதுமக்கள் முகாம் உள்ளே செல்லும் காட்சி.

தமிழகம் முழுவதும் நீடித்து வரும் தடுப்பூசி தட்டுப்பாடானது கன்னியாகுமரி மாவட்டத்திலும் நீடித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினாலும் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று மாவட்டத்திற்கு ஆயிரத்து 1190 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் 5 முகாம்கள் மூலமாக நேரடியாக டோக்கன் பெற்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

நாகர்கோவிலில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 250 டேஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலை 3 மணி முதலே கூடி நின்றனர்.

அறிவித்தபடி 250 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் மற்ற பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாங்குவாதம் அதிகரித்து ஆவேசம் அடைந்த பொதுமக்கள் மையத்தின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News