அண்ணா பிறந்த நாள் விழா: குமரியில் அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்
குமரியில் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் அரசியல் பாகுபாடின்றி கொண்டாடப்பட்டது.;
பேரறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அண்ணாவின் சிலைகள் மற்றும் திருவுருவ படங்களுக்கு திமுக, அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக, அதிமுக, மதிமுக, அமமுக என பல்வேறு அரசியல் கட்சியினர் கட்சி பாகுபாடு இன்றி மரியாதை செலுத்தினர்.