கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.;

Update: 2021-11-24 13:15 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலம் முதல் தற்போது வரை அதிமுகவின் வளர்ச்சிக்காகவும் அதிமுகவை ஆட்சியில் அமர வைப்பதற்காகவும், பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி காலங்களில் சிறைவாசம் அனுபவித்து வயது முதிர்வு காரணமாக பலர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்று உள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள் 13 பேரை கவுரவிக்கும் வகையில் இன்று அவர்களை நேரில் சந்தித்த நாகர்கோவில் மாநகர கழக செயலாளர் சந்துரு மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் ஆகியோர் அவர்களுக்கு வேஷ்டி, சட்டை மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடைகள் மற்றும் நிதியுதவி அளித்து அதிமுகவின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News