குமரி அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல்: தளவாய் சுந்தரம் பங்கேற்பு

குமரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பங்கேற்றார்.;

Update: 2022-01-14 15:00 GMT

நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர், பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

குமரி அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல்: தளவாய் சுந்தரம் பங்கேற்பு
  • whatsapp icon

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் இருக்கும் தமிழர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் நலமுடன் வாழ வேண்டும், நோய் தொற்று அகல வேண்டும் என்பது போன்ற பல்வேறு வேண்டுதல்களுடன் உழவர்களுக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கூடிய அதிமுகவினர், பொங்கல் விழாவை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

மேலும் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான பச்சைமால் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News