நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி - பாஜகவுக்கு அதிமுக ஆதரவு

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக அறிவித்து உள்ளது.;

Update: 2022-03-01 13:45 GMT

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று கடந்த 22 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 7 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் வெற்றி பெற்றது. மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீனா தேவிற்கு அதிமுக முழு ஆதரவு அளித்துள்ளது. இன்று நாகர்கோவிலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் முன்னிலையில் பாஜக, அதிமுக கவுன்சிலர்கள் சந்தித்து அறிமுகமாகினர்.

தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம் நாகர்கோவில் மாநகராட்சியில் பாஜகவை சேர்ந்த மேயர் வேட்பாளர் மீனாதேவ்க்கு அதிமுக தலைமை ஒப்புதலுடன் அதிமுக கவுன்சிலர்கள் முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.

Tags:    

Similar News