நாகர்கோவிலில் திமுகவில் ஐக்கியமான அதிமுக கவுன்சிலர்

நாகர்கோவிலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர் விஜயன், திமுகவில் இணைந்தார்.

Update: 2022-03-08 12:45 GMT

 அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆன விஜயன் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஏழு பேர் வெற்றி பெற்றனர்.

அதன்படி கடந்த 2 ஆம் தேதி வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்ட நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்களின் பலம் 7 ஆக இருந்தது. இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி 43-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆன விஜயன் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

அதன்படி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மகேஷ் ஆகியோர் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார். இதன் காரணமாக நாகர்கோவில் மாநகராட்சியில் 7 ஆக இருந்த அதிமுகவின் பலம் தற்போது 6 ஆக குறைந்துள்ளது.

Tags:    

Similar News